/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒரே நாளில் பல வாகனங்களுக்கு எப்.சி., புதுபிப்பு பணி; சாலையில் தொடரும் நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறல்

ADDED : பிப் 06, 2025 08:32 PM

ஊட்டி; ஊட்டி-மஞ்சூர் பிரதான சாலையில் ஒரே நேரத்தில் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டு எப்.சி.,பணி நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், கார், பஸ்,மேக்சி கேப், லாரி உள்ளிட்ட, 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் இயங்கி வருகிறது. அந்தந்த வாகனங்களின் காலத்திற்கு ஏற்ப ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வாகனங்களை எடுத்து வந்து எப்.சி., காட்டப்பட வேண்டும். அதில், எப்.சி.,க்கு கொண்டு வரும் வாகனங்களை, ஊட்டி-மஞ்சூர் பிரதான சாலையில் காந்தி நகர் அருகே சாலையில் நிறுத்தி எப்.சி. சரிபார்க்கப்படுகிறது.
ஒரே நாளில் பல வாகனங்கள் எப்.சி.,
நேற்று முன்தினம் ஒரே நாளில், அரசு பஸ், லாரி மேக்சி கேப், பிக்-கப் வாகனம் என, 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் எப்.சி.,க்கு வந்துள்ளன. எப்.சி.க்கு வந்த வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் காந்திநகரில் இருந்து லவ்டேல் சந்திப்பு வரை, 2 கி.மீ., துரத்துக்கு ஒருபுறம் நிறுத்தி எப்.சி., பரிசோதனை செய்தார்.
காலையிலிருந்து மாலை வரை இப்பணி நடந்தது. ஒரு வழி பாதையில் மட்டும் வாகனங்கள் செல்ல முடிந்தது.
பிரதான சாலை என்பதால் எப்.சி., சரிபார்க்கும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் தாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
பயணிகள் கூறுகையில், 'வட்டார போக்குவரத்து அலுவலர்கள் எப்.சி., பணியை அடிக்கடி இச்சாலையில் மேற்கொள்வதால் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறி வருவதுடன், குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வேறு பகுதியில் இப்பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.