/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரவில் கிராமத்துக்கு வந்த கரடி மரத்தில் அமர்ந்ததால் அச்சம்
/
இரவில் கிராமத்துக்கு வந்த கரடி மரத்தில் அமர்ந்ததால் அச்சம்
இரவில் கிராமத்துக்கு வந்த கரடி மரத்தில் அமர்ந்ததால் அச்சம்
இரவில் கிராமத்துக்கு வந்த கரடி மரத்தில் அமர்ந்ததால் அச்சம்
ADDED : ஜூலை 11, 2025 11:18 PM
குன்னுார்; குன்னுார் மேல் பாரத் நகரில் நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த கரடிகளில், ஒன்று மரத்தில் ஏறி நின்று நீண்ட நேரம் செல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் நள்ளிரவு, சேலாஸ் மேல் பாரத் நகர் கிராமத்திற்குள் இரு கரடிகள் புகுந்தது. நாய்கள் குரைத்ததால், சப்தம் கேட்டு கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது ஒரு கரடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. மற்றொரு கரடி முனீஸ்வரர் கோவில் அருகே இருந்த மரத்தின் மீது ஏறியது.
நீண்ட நேரம் மரத்தில் இருந்த கரடி கீழே இறங்காமல் இருந்தது. தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர், போலீசார் மக்கள் அனைவரையும் வீடுகளுக்குள் செல்ல அறிவுறுத்தினர். தொடர்ந்து நேற்று அதிகாலை,1:00 மணியளவில், மரத்தில் இருந்த கரடி கீழே இறங்கி வனப்பகுதிக்குள் சென்றது.
நேற்று அதிகாலை தைமலை பகுதியில் உள்ள ரேஷன் கடையை உடைத்து உள்ளே சென்ற கரடி பொருட்களை நாசம் செய்தது. கரடிகளின் நடமாட்டம் அதிகரித்ததால், மக்கள் இரவில் வெளியே நடமாட அச்சமடைந்துள்ளனர்.