/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரவில் கடைக்கு வந்த யானையால் அச்சம்
/
இரவில் கடைக்கு வந்த யானையால் அச்சம்
ADDED : நவ 15, 2024 09:19 PM
பந்தலுார்; பந்தலுார் அய்யன்கொல்லி மற்றும் அதனை ஒட்டிய சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் யானைகள் முகாமிட்டு உள்ளன. அதில், கட்டைகொம்பன் மற்றும் புல்லட் ஆகிய இரண்டு யானைகளும், குடியிருப்புகள், கடைகள், சத்துணவு கூட்டங்களை உடைத்து, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை சேதப்படுத்தி உட்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் அய்யன்கொல்லி பஜார் பகுதிக்கு வந்த இரண்டு யானைகளும், அரசு பழங்குடியினர் பள்ளி வளாகத்திற்குள் சென்றன. அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனக்குழுவினர் யானைகளை துரத்திய நிலையில், புல்லட் யானை சாலை ஓரத்தில் பூட்டப்பட்டிருந்த கடைகள் முன்பாக வந்து, உணவு பொருட்களை எடுக்க முயற்சித்துள்ளது.
கடையின் ஷட்டர்களை திறக்க முயன்றும் முடியாத நிலையில், பின்னர் அங்கிருந்து வெளியேறியது. இந்த காட்சிகள் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில்,' இப்பகுதியில் உலா வரும் இரு யானைகளையும் கண்காணிக்கும் பணியில் வன குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இரவில் இப்பகுதியில் வரும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.
யானைகள் உலா வருவது குறித்து அறிந்தால், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவசர தேவை இன்றி இரவில் வாகனங்களில் செல்வதையும் தவிர்க்க வேண்டும்,' என்றனர்.

