/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் பர்லியார் பகுதியில் இரவில் வரும் யானையால் அச்சம்
/
குன்னுார் பர்லியார் பகுதியில் இரவில் வரும் யானையால் அச்சம்
குன்னுார் பர்லியார் பகுதியில் இரவில் வரும் யானையால் அச்சம்
குன்னுார் பர்லியார் பகுதியில் இரவில் வரும் யானையால் அச்சம்
ADDED : ஜூலை 28, 2025 08:52 PM

குன்னுார்: குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதை ஓரங்களில், 10க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உலா வருகின்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பர்லியார் பகுதியில் கொம்பன் என்ற ஒற்றை யானை தண்ணீருக்காக குடியிருப்பு கதவுகள், குடிநீர் தொட்டிகளையும் உடைத்து வருகிறது. இரு நாட்களுக்கு முன்பு டேவிட் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே உணவு தேடியுள்ளது.அப்போது, வீட்டில் இருந்த இருவரும் மற்றொரு அறைக்குள் சென்று தப்பினர்.
நேற்று இரவு குடியிருப்புக்குள் வந்த இந்த யானையை மக்கள் விரட்ட முற்பட்டனர். எனினும், இவர்களை யானை விரட்டியது. அருகில் உள்ள கழிப்பிடத்தில் மறைய சென்ற, ஆண்டனி என்பவரை தாக்கியதால் காயமடைந்தார். இவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இப்பகுதியை சேர்ந்த சத்யா கூறுகையில், ''இதே இடத்தில் குட்டியுடன் வரும், 3 யானைகள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. சமீபத்தில் சம வெளி பகுதியில் இருந்து வந்த கொம்பன் ஒற்றை யானை மட்டுமே குடியிருப்புக்கு வந்து தாக்குகிறது. இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்,''என்றார். வனத்துறையினர் கூறுகையில், 'யானையை விரட்ட குழு அமைத்து கண்காணிக்கப்படும்,' என் றனர்.