/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீட்டை சேதப்படுத்திய காட்டு யானையால் அச்சம்
/
வீட்டை சேதப்படுத்திய காட்டு யானையால் அச்சம்
ADDED : செப் 02, 2025 08:19 PM

கூடலுார்; கூடலுார் ஓவேலி அருகே, காட்டு யானைவீட்டை சேதப்படுத்திய சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலுார், ஓவேலி பகுதியில், 9 காட்டு யானைகள் ஒன்றாக முகாமிட்டுள்ளன. பகல் நேரங்களில் வனப்பகுதியில் மேய்ச்சல் ஈடுபட்டு இவைகள், இரவில், குடியிருப்புகளில் 'விசிட்' செய்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இந்த யானைகள் நேற்று முன்தினம், இரவு நியூஹோப் பகுதியில் முகாமிட்டன. நேற்று அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, மணிமேகலை என்பவரின் வீட்டை யானை ஒன்று சேதப்படுத்தின. தகவல் அறிந்த வனத்துறையினர் சேதமடைந்த வீட்டை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அச்சமடைந்துள்ள மக்கள் கூறுகையில், 'இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் நுழையும் யானைகள் விவசாய பயிர்கள், வீடுகளை செய்தப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.