/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'டிஜிட்டல் கைது' என்று மிரட்டல் விடுத்து பெண் இன்ஜினியரிடம் ரூ.16 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீசார் விசாரணை

ADDED : டிச 11, 2024 09:35 PM

ஊட்டி; 'டிஜிட்டல் கைது' என, மிரட்டல் விடுத்து, பெண் இன்ஜினியரிடம் 16 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது.
குன்னுார் பகுதியை சேர்ந்த, 26 வயது இளம்பெண் கோவையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அலுவலக உத்தரவின் பேரில் வீட்டில் இருந்து பணிபுரிகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு எண்ணில் இருந்து அவர் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.
மறுமுனையில் பேசியவர், 'உங்கள் பெயரில் தனியார் கூரியர் மூலம் ஒரு பார்சல் செல்கிறது, அதில், போதை பொருட்கள் செல்கிறது. இதனால், 'ஸ்கைப் வீடியோ' அழைப்பில், 24 மணி நேரமும் இணைப்பில் இருக்க வேண்டும். உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்கிறோம்.
நாங்கள் கூறும் வரை வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது, அதுவரை வீடியோ அழைப்பு பதிவு செய்யப்படும். விசாரணைக் காக உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அரசு கணக்கிற்கு மாற்ற வேண்டும்,' என, மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து, வங்கி கணக்கு விவரங்களை கொடுத்து, அந்த எண்ணிற்கு பணத்தை மாற்றுமாறு கூறியுள்ளார்.
'இதனை உண்மை' என நம்பிய இளம் பெண் தனது வங்கி கணக்கில் இருந்து, 16 லட்சம் ரூபாயை அனுப்பி உள்ளார். பணம் சென்றதும், 'வீடியோ' அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அதன்பின், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம் பெண், ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் பிரவீணா கூறுகையில், ''டிஜிட்டல் கைது என கூறி, குன்னுார் பெண் இன்ஜினியரிடம், 16 லட்சம் ரூபாய், மர்ம நபர்கள் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
''இதுபோன்ற மோசடி நபர்களிடம் மக்கள் ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். சைபர் கிரைம் போலீசார் வெளியிடும் விழிப்புணர்வு தகவல்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.