/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் தொங்கிய கேபிள் ஒயர் அகற்ற உதவிய பெண் போலீசார்
/
சாலையில் தொங்கிய கேபிள் ஒயர் அகற்ற உதவிய பெண் போலீசார்
சாலையில் தொங்கிய கேபிள் ஒயர் அகற்ற உதவிய பெண் போலீசார்
சாலையில் தொங்கிய கேபிள் ஒயர் அகற்ற உதவிய பெண் போலீசார்
ADDED : நவ 12, 2025 11:02 PM

ஊட்டி: தாவரவியில் பூங்கா சாலையில் அபாயகரமாக தொங்கி கொண்டிருந்த கேபிள் ஒயர் போலீசார் உதவியுடன் அகற்றப்பட்டது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலை வழியாக ஏராளமான வணிக நிறுவனம், தாவரவியல் பூங்கா, ராஜ்பவன், எஸ்.பி., குடியிருப்பு உள்ளிட்டவைகள் இருப்பதால் இச்சாலையில் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.
இந்நிலையில், அசெம்பளி தியேட்டர் எதிரே சாலையில் கேபிள் ஒயர் கம்பத்தில் வாகனம் மோதியதில், கேபிள் ஒயர் தொங்கி கொண்டிருந்தது. இதனால், வாகனங்கள் சென்று வர சிரமம் ஏற்பட்டு வந்ததுடன், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் இடைஞ்சலாக இருந்தது.
அங்கு பணியில் இருந்த புறக்காவல் போலீசாரிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
சீரமைப்பு பணிக்கு வந்த ஊழியர்களுடன், புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த இரண்டு பெண் போலீசார், கேபிள் ஊழியர்களுடன் ஒரு மணி நேரம் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு அபாய நிலையில் தொங்கி கொண்டிருந்த கேபிள் ஒயரை முழுமையாக அகற்றி வாகனங்கள் இடையூறின்றி செல்ல நடவடிக்கை எடுத்தனர். பெண் போலீசாரின் உதவியை பொதுமக்கள் பாராட்டினர்.

