/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி நேரு பூங்காவில் இறுதி கட்ட பணி
/
கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி நேரு பூங்காவில் இறுதி கட்ட பணி
கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி நேரு பூங்காவில் இறுதி கட்ட பணி
கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி நேரு பூங்காவில் இறுதி கட்ட பணி
ADDED : ஏப் 28, 2025 11:46 PM
கோத்தகிரி, ; கோத்தகிரி நேரு பூங்காவில், வரும், 3ம் தேதி காய்கறி கண்காட்சி நடைபெறுவதை ஒட்டி, இறுதிக்கட்ட பணி நடந்து வருகிறது.
கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் நேரு பூங்கா அமைந்துள்ளது. நகராட்சி பராமரிப்பில் உள்ள இப்பூங்காவில், தோட்டக்கலை துறை சார்பில் ஆண்டுதோறும் காய் கறி கண்காட்சி நடத்தப்படுகிறது.
கோடை சீசனுக்காக பூங்காவில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு, தற்போது பூத்து குலுங்குகின்றன. பூங்கா புல்தரை, நேர்த்தியாக சீரமைக்கப்பட்டு, பசுமைக்கு திரும்பி உள்ளது.
கோடை விழாவில் முதல் நிகழ்ச்சியாக, வரும், 3, 4 ம் தேதிகளில், நேரு பூங்காவில், 13வது காய்கறி கண்காட்சி நடக்கிறது. அதற்காக, வர்ணம் பூசுவது, இருக்கைகள் மற்றும் நடைபாதைகளை சீரமைப்பது உள்ளிட்ட இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
நீலகிரி உட்பட, மாநிலத்தின் பல்வேறு மாவட்ட தோட்டக்கலைத் துறை, உள்ளூர் விவசாயிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர்களின் அரங்குகள் அமைக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் வருகையை அதிகரிக்க செய்ய, பூங்காவை பொலிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோத்தகிரி நகராட்சி கமிஷனர் இளம் பரிதி மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் பணியை பார்வையிட்டு, விழா ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.