/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிதி உதவி
/
ஊட்டியில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிதி உதவி
ADDED : பிப் 09, 2024 02:27 AM

ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே காந்தி நகரில் தடுப்பு சுவர் கட்டுமான பணியின் போது கழிப்பிட கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பாக்கியலட்சுமி, முத்துலட்சுமி, ஷகிலா, உமா, ராதா, சங்கீதா ஆகிய 6 பெண்கள் உயிரிழந்தனர்.
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. நேற்று காலை அரசு தலைமை மருத்துவமனையில் உடல்களுக்கு சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் அருணா, எஸ்.பி.சுந்தரவடிவேல் ஆகியோர் அஞ்சலி செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் அரசு நிதி தலா 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் தன் சொந்த பணத்தில் தலா 50,000 ரூபாய் வழங்கினார். தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

