
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில், கடந்த, 2019 ஆக., 15 முதல் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் தடை விதிக்கப்பட்டது. அதனை எடுத்து வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை, பிருந்தாவன் அருகே உள்ள வெலிங்டன் கண்டோன்மென்ட் வாரிய சோதனை மையத்தில், நடத்திய ஆய்வில், வேலுார் ராணிபேட்டை பகுதியில் இருந்து வந்த வேனில் இருந்து, 5 பாக்ஸ் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகள் கூறுகையில்,'கல்லார் சோதனை சாவடியில், இந்த பாட்டில்களை பெற்று, அதற்கு பதில், 5 லிட்டர் பெரிய கேன் தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.

