/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அருவங்காடு பெட்டி கடையில் தீ; உடனடியாக அணைத்ததால் பாதிப்பு தவிர்ப்பு

ADDED : ஜூலை 06, 2025 10:44 PM

குன்னுார்; குன்னுார் அருகே அருவங்காடு தபால் அலுவலகம் அருகே பெட்டி கடை திடீரென தீப்பிடித்த போது, வெடி மருந்து தொழிற்சாலை தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
குன்னுார் - ஊட்டி சாலை அருவங்காடு தபால் அலுவலகம் அருகே பெட்டி ஷூ கடை உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:00 மணியளவில் அப்பகுதியில் திடீரென தீப்பிடித்துள்ளது.
தகவலின் பேரில், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர்.
போலீசார் விசாரணையில், 'இந்த கடையில், பழைய பயனற்ற ஷூக்கள் இருந்துள்ளது.
அங்கிருந்த குணசேகரன்,54, என்பவர், புகை பிடித்து போட்ட சிகரெட்டால் தீப்பற்றி உள்ளது. உடனடியாக தீயை அணைத்ததால், அருகில் இருந்த கடைகள், பி.எஸ்.என்.எல். ஜங்ஷன் பாக்ஸ், தபால் அலுவலகம் பகுதிகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. யாருக்கும் பாதிப்பில்லை,' என்றனர்.