/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ஸ்கிராப்' கிடங்கில் தீ விபத்தால் பரபரப்பு
/
'ஸ்கிராப்' கிடங்கில் தீ விபத்தால் பரபரப்பு
ADDED : நவ 03, 2025 11:35 PM

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி அருகே உள்ள ஓங்கல்லூர், காரக்காடு என்ற இடத்தில் 'ஸ்கிராப்' கிடங்கு செயல்படுகிறது. அங்கு, நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள், தீயணைப்பு படை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து ஆறு பிரிவு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, நீண்ட நேர முயற்சிக்கு பின் தீயை அணைத்தனர்.
குடியிருப்புப் பகுதியின் நடுவில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் தக்க நேரத்தில் வந்து, விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில், கிடங்கு முழுமையாக கருகியது.

