/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தீ விபத்தில் பாதித்த கடைகளை சீரமைக்க வேண்டும்: நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
/
தீ விபத்தில் பாதித்த கடைகளை சீரமைக்க வேண்டும்: நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
தீ விபத்தில் பாதித்த கடைகளை சீரமைக்க வேண்டும்: நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
தீ விபத்தில் பாதித்த கடைகளை சீரமைக்க வேண்டும்: நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : மார் 28, 2025 09:10 PM
குன்னுார்; குன்னுார் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சுசீலா தலைமையில் நடந்தது.
அதில், 'குன்னுார் நகராட்சி மார்க்கெட்டில் கடந்த, 26ல் நடந்த தீ விபத்தில் பாதித்த கடைகளை உடனடியாக கட்டி தர பொது தீர்மானம் நிறைவேண்டும்; கடைகளை உடனடியாக சீரமைத்து கட்டி தர வேண்டும்; அரசிடம் இழப்பீடு பெற்று தர வேண்டும்; 6 மாதம் அல்லது ஓராண்டிற்கு கடைகள் இடித்து புதிய கடைகள் கட்டும் பணியை ஒத்திவைக்க வேண்டும்,' என, துணை தலைவர் வாசிம் ராஜா, கவுன்சிலர்கள் ஜாகிர் உசேன், மன்சூர், ராஜ்குமார், ரங்கராஜ் ஆகியோர் வலியுறுத்தினர்.
கமிஷனர் இளம்பரிதி கூறுகையில், ''கடைகள் கட்ட அரசு உயரதிகாரிகளிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இழப்பீடு பெற்று தர, மாவட்ட கலெக்டர், கூடுதல் கலெக்டர் அறிக்கை தயார் செய்து அனுப்ப உள்ளனர்,'' என்றார்.
கவுன்சிலர் சரவணக்குமார்: நிலுவை தொகை வசூலில் வியாபாரிகள் பாதிக்கப்பட்ட நிலையில், தீ விபத்தால் ஈடு இல்லாத இழப்பு எற்பட்டுள்ளது. நகராட்சியில் தண்ணீர் வாகனம் வைக்க வேண்டும். மார்க்கெட்டில் இருந்த, குழாய்கள் அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் குழாய்கள் அமைத்து தண்ணீர் வழங்க வேண்டும்.
ராமசாமி : ரம்ஜான் உட்பட பண்டிகை காலத்தில் ஏற்பட்ட இந்த துயர சம்பவம் சீர் செய்ய, மாநில முதல்வர் வரை தகவல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. வரும், 30ம் தேதி எம்.பி., ராஜா நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
மணிகண்டன்: வியாபாரிகளுக்கு தி.மு.க., துணை நிற்கிறது. மூதாதையர் பெயரில் இருந்த மார்க்கெட் கடைகள் வாரிசுகளுக்கு பெயர் மாற்றி தரப்பட்டுள்ளது
சரவணகுமார்; உமாராணி அ.தி.மு.க.., பதவியில் இருக்கும் போதே, வாரிசுதாரர் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாடகை உயர்த்தியது தி.மு.க., ஆட்சியில் தான் என்றவுடன், தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 'தமிழகத்தில் உள்ள, 145 நகராட்சிகளில் இங்கு மட்டுமே சொத்து வரி சதுர அடிக்கு, 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது,' என, சரவணகுமார் கூறினார். '2022ம் ஆண்டில் அறிவித்த படியே வரி வசூலிக்கப்படுகிறது,' என, கமிஷனர் இளம் பரிதி தெரிவித்தார்.