/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் மார்க்கெட்டில் தீ 23 கடைகள் எரிந்து சேதம்
/
குன்னுார் மார்க்கெட்டில் தீ 23 கடைகள் எரிந்து சேதம்
குன்னுார் மார்க்கெட்டில் தீ 23 கடைகள் எரிந்து சேதம்
குன்னுார் மார்க்கெட்டில் தீ 23 கடைகள் எரிந்து சேதம்
ADDED : மார் 28, 2025 01:48 AM

குன்னுார்:நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சி மார்க்கெட்டில், 800க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு இங்குள்ள பேன்சி ஸ்டோர் அருகே தீப்பிடித்து புகை வந்ததை கண்ட வியாபாரிகள், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
விபத்தில், பேன்சி ஸ்டோரில் இருந்த பொருட்கள் எரிந்து தீ பரவி, அருகில் இருந்த துணி கடைகள், ஜுவல்லரி, ஹார்டுவேர், பெயின்ட் கடை, மூலிகை, பல சரக்கு கடை, மொபைல் போன் கடை உள்ளிட்ட கடைகள் எரிந்து சேதமாகின.
தொடர்ந்து, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மற்றும் ராணுவ பயிற்சி கல்லுாரி தீயணைப்பு துறை வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, நேற்று காலை தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சம்பவம் நடந்த பகுதிகளை, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., நிஷா உட்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வியாபாரிகள் கூறுகையில், 'எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், அரசிடம் நஷ்டஈடு பெற்று தர வேண்டும்' என்றனர். நகராட்சி கமிஷனர் இளம்பரிதி கூறுகையில், ''இந்த சம்பவத்தில், 23 கடைகள் எரிந்துள்ளன. சேத மதிப்பீடு விசாரணைக்கு பின் தெரியவரும். வியாபாரிகளின் கோரிக்கை அரசிடம் தெரிவிக்கப்படும்,'' என்றார்.