பழக்கடை குடோனில் தீ விபத்து பிளாஸ்டிக் பொருட்கள் சேதம்
பழக்கடை குடோனில் தீ விபத்து பிளாஸ்டிக் பொருட்கள் சேதம்
ADDED : மே 01, 2026 03:37 AM
பாலக்காடு: பாலக்காட்டில் பழக்கடை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்கள், அட்டை பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன.
கேரள மாநிலம், பாலக்காடு நகரின் மையப்பகுதியான நரிக்குத்தியில் செயல்படும் பழக்கடை குடோனில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் காகிதப் பெட்டிகள் குவிக்கப்பட்டிருந்ததால், தீ வேகமாக பரவியது.
அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு தீ பரவுமோ என்ற அச்சத்தில் அங்கிருந்த மக்கள் அலறியடித்து வெளியேறினர். தீவிபத்தினால் ஏற்பட்ட அடர்ந்த கரும்புகை அந்தப் பகுதி முழுவதையும் சூழ்ந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் முயற்சித்து தீயை அணைத்தனர். குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் காகிதப் பெட்டிகள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தது.
அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் சுவரில் கரும்புகை படிந்து அலங்கோலமானது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீயணைப்புத் துறையினரின் துரிதமான மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
