/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாஸ்டியர் நிறுவனத்தில் தீ தடுப்பு ஒத்திகை
/
பாஸ்டியர் நிறுவனத்தில் தீ தடுப்பு ஒத்திகை
ADDED : அக் 29, 2024 08:47 PM

குன்னுார்: குன்னுார் பாஸ்டியர் நிறுவனத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
குன்னுார் பாஸ்டியர் நிறுவனத்தில் முத்தடுப்பூசி தயாரிப்புக்கான சோதனை பணிகள் நடந்து வருகிறது. இங்கு பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு குன்னுார் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில், செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
முன்னணி தீயணைப்பு வீரர் சுப்ரமணி பேசுகையில், ''தீ விபத்து ஏற்பட்டால் முதலில் தீயை தண்ணீர் நனைக்கப்பட்ட சாக்கு போன்ற அடர்த்தியானவை மூலம் அணைப்பதுடன் தீ பரவாமல் இருக்க துரிதமாக செயல்பட வேண்டும்.
வருங்காலங்களில் மழை பாதிப்பு போன்று வெப்பத்தாலும் பாதிப்புகள் ஏற்படும் என்பது, 'தினமலர்' நாளிதழில் வெளியான அறிவியல் ஆயிரம் பகுதியில், தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் ஏற்படுவதை தவிர்க்க பசுமையான வனங்கள் அவசியம்,'' என்றார்.