தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குன்னுாரில் இரவு நேர காவலர்களுக்கு தீத்தடுப்பு செயல்முறை விளக்கம்

 குன்னுாரில் இரவு நேர காவலர்களுக்கு தீத்தடுப்பு செயல்முறை விளக்கம்

 குன்னுாரில் இரவு நேர காவலர்களுக்கு தீத்தடுப்பு செயல்முறை விளக்கம்


ADDED : பிப் 02, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னூர்: குன்னூரில், தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் உள்ள இரவு காவலர்களுக்கான, தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் தீயணைப்பு நிலைய வளாகத்தில், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள இரவு காவலர்களுக்கான தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமை வகித்து பேசினார். சிறப்பு நிலைய அலுவலர் சுப்ரமணி, தீயணைப்பாளர் மதன் உட்பட தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். தீ பிடித்தால் தண்ணீர் ஊற்றாமல், அதனை நனைந்த அடர்த்தியான சாக்குப்பை வாயிலாக தீயை அணைப்பது, காஸ் சிலிண்டரில் தீ ஏற்பட்டால், உரிய அளவில் உள்ள பிளாஸ்டிக் கேன் கொண்டு காற்று புகாத வண்ணம் மூடி அணைப்பது உள்ளிட்ட செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இரவு நேர காவலர்கள் தீயை அணைத்து பயிற்சி பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us