/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலையில் 194 கி.மீ.,க்கு தீ தடுப்பு கோடு; வனத்தீயை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ADDED : ஜன 08, 2025 11:24 PM

கூடலுார்; முதுமலையில், வனத்தீ ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கையாக, 194 கி.மீ., துாரம் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த ஆண்டு பருவமழை அதிகம் பெய்தது. இதனால், வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்து வருகிறது. இந்நிலையில், இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது. தாவரங்கள், செடிகள் கருகி வனத்தீ உருவாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்க, முன்னெச்சரிக்கையாக வனப்பகுதியில், 194 கி.மீ., துாரம் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதில், கர்னாடகா பந்திப்பூர் புலிகள் காப்பகம்; கேரளா முத்தங்கா வனச் சரணாலயம் பகுதிகளில் ஏற்படும் வனத்தீ, முதுமலைக்குள் பரவுவதை தடுக்க, முன்னெச்சரிக்கையாக முதுமலை எல்லையில், 49 கி.மீ., துாரம் தீ தடுப்பு கோடு அமைக்கு பணி துவக்கப்பட்டுள்ளது. மேலும், முதுமலை வழியாக செல்லும் சாலையில் இருபுறமும், 27 கி.மீ., துாரம் தீ ஏற்படுத்தி, தீ தடுப்பு கோடு அமைக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதுமலை துணை இயக்குனர் வித்யா கூறுகையில், ''கோடையில் வனத்தில் ஏற்படும் வனத்தீயை தடுக்க, தீ தடுப்பு கோடு அமைப்பது உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், முதுமலை வழியாக பயணிப்பவர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதிகளில் வீசி செல்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.