தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பாரதியார் மண்டபம் அருகே பரவிய தீ: கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்

 பாரதியார் மண்டபம் அருகே பரவிய தீ: கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்

 பாரதியார் மண்டபம் அருகே பரவிய தீ: கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்


ADDED : ஏப் 20, 2026 08:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 08:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் பாரதியார் மண்டபம் அருகே பரவிய தீயை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வறண்ட சூழலில் ஆங்காங்கே குப்பைகளுக்காக வைக்கும் தீ பரவி வருகிறது. இந்நிலையில், குன்னுார் பாரதியார் மண்டபம் அருகே நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பரவுவது தவிர்க்கப்பட்டது. தீ வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை தீயிட்டு எரிப்பதை கட்டாயம் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us