/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூட்டிய வீட்டில் சிக்கிய முதியவர்: மீட்ட தீயணைப்பு துறையினர்
/
பூட்டிய வீட்டில் சிக்கிய முதியவர்: மீட்ட தீயணைப்பு துறையினர்
பூட்டிய வீட்டில் சிக்கிய முதியவர்: மீட்ட தீயணைப்பு துறையினர்
பூட்டிய வீட்டில் சிக்கிய முதியவர்: மீட்ட தீயணைப்பு துறையினர்
ADDED : ஜூன் 01, 2025 10:21 PM
குன்னுார்:
குன்னுார் ஓட்டுப்பட்டறை சேர்ந்தவர் விஸ்வநாதன்,68. இவர் உடல்நிலை பாதித்த நிலையில், வீட்டினுள் இருந்துள்ளார். நடமாடவும் முடியாத நிலையில், இவரது மனைவியின் உறுதுணையுடன் எழ வேண்டிய நிலையில், இவர் வீட்டை பூட்டி கடைக்கு சென்றுள்ளார். வரும்போது சாவி தொலைந்த நிலையில், பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.
இதனால், உடல்நிலை பாதித்த விஸ்வநாதனை மீட்கவும் உள்ளே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், குன்னுார் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பெயரில் நள்ளிரவு, 12:30 மணியளவில், அங்கு சென்று தீயணைப்பு துறையினர், பின்புற கதவு பூட்டபட்ட இடத்தை உடைத்து திறந்து விட்டனர்.
உடல் நிலை பாதித்தவரை, 5 மணி நேரத்திற்கு பிறகு, உள்ளே சென்று பார்த்த பிறகு அவரது மனைவி நிம்மதி அடைந்தார். தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.