பள்ளத்தில் விழுந்த முதியவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
பள்ளத்தில் விழுந்த முதியவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
ADDED : மார் 03, 2026 06:34 AM
குன்னுார்: குன்னுார் தடுப்புச் சுவரில் இருந்து பள்ளத்தில் விழுந்து, வீட்டின் பக்கவாட்டில் சிக்கிக்கொண்ட முதியவரை, தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
குன்னுார் கன்னி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சென்னியப்பன்,62. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12 மணியளவில், சித்தி விநாயகர் கோவில் தெரு அருகே சாலையோர தடுப்பு சுவரில் இருந்து பள்ளத்தில் விழுந்துள்ளார். வீட்டின் பக்கவாட்டு இடுக்கில் சிக்கிக்கொண்ட முதியவர் சப்தமிட்டுள்ளார். அங்கு வந்த மக்கள் மீட்க முயற்சித்தும், முடியாத நிலையில், மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் குமார் மேற்பார்வையில் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று அரை மணி நேரம் போராடி முதியவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸில் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
