/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
5 ஆண்டில் இல்லாத உறைபனி; 10,000 ஏக்கர் தேயிலை போச்சு
/
5 ஆண்டில் இல்லாத உறைபனி; 10,000 ஏக்கர் தேயிலை போச்சு
5 ஆண்டில் இல்லாத உறைபனி; 10,000 ஏக்கர் தேயிலை போச்சு
5 ஆண்டில் இல்லாத உறைபனி; 10,000 ஏக்கர் தேயிலை போச்சு
ADDED : ஜன 02, 2026 01:56 AM

குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில், ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவு பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்திருப்பதால், 10,000 ஏக்கர் தேயிலை செடிகள் பாதிக்கப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து, பல இடங்களிலும் மைனஸ் டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் பசுந்தேயிலை மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டு, உற்பத்தியும் சரிவை சந்தித்துள்ளது.
கடந்த, 2020க்கு முன், 3,700 ஏக்கர் முதல், 4,900 ஏக்கர் பரப்பளவில் தேயிலை செடிகள் கருகின. 2021---- -- 22 ஆண்டுகளில் பனிப் பொழிவு குறைந்ததால், 1,200 ஏக்கர் மட்டுமே தேயிலை செடிகள் கருகின. மூன்று ஆண்டுகளாக பாதிப்பு குறைவாக இருந்தது.
ஆனால், நடப்பு பருவத்தில், இதுவரை, 10,000 ஏக்கர் பசுந்தேயிலை பனியால் பாதிக்கப்பட்டுள்ளன.
உபாசி வேளாண் ஆராய்ச்சி மைய அலுவலர் முருகேசன் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில், ஐந்து ஆண்டுகளை ஒப்பிடுகையில், இது மிகப்பெரிய பாதிப்பு.
''பாதிக்கப்பட்ட இடங்களில், ஒரு ஏக்கருக்கு காப்பர் ஆக்சிகுளோரைடு, 50 லிட்டர் தண்ணீரில் கரைத்து, பூஞ்சானகொல்லி தெளிக்க வேண்டும்.
''கொழுந்து இலை வரும் இடங்களில் நுண்ணுாட்ட சத்து தெளித்தல் அவசியம். லேசாக பாதிக்கப்பட்ட இடங்களில், அந்த இலைகளை வெட்டி அகற்ற வேண்டும். யூரியா எம்.ஓ.பி., கலந்து தெளித்தல் அவசியம்,'' என்றார்.

