/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதல் முறையாக போலீசாரின் ஆயுத கண்காட்சி; மாணவர்களை கவர்ந்த பழங்கால துப்பாக்கிகள்
/
முதல் முறையாக போலீசாரின் ஆயுத கண்காட்சி; மாணவர்களை கவர்ந்த பழங்கால துப்பாக்கிகள்
முதல் முறையாக போலீசாரின் ஆயுத கண்காட்சி; மாணவர்களை கவர்ந்த பழங்கால துப்பாக்கிகள்
முதல் முறையாக போலீசாரின் ஆயுத கண்காட்சி; மாணவர்களை கவர்ந்த பழங்கால துப்பாக்கிகள்
ADDED : அக் 22, 2024 11:46 PM

ஊட்டி : ஊட்டியில் காவல்துறை சார்பாக முதன் முறையாக நடந்த ஆயுத கண்காட்சி பள்ளி மாணவ, மாணவிகளை வெகுவாக கவர்ந்தது.
நீலகிரி மாவட்ட போலீஸ் சார்பில் முதன் முறையாக காவல்துறையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் குறித்த ஒரு நாள் கண்காட்சி, ஆயுதப்படை பிரிவு சார்பில் ஊட்டி சிறுவர் மன்றத்தில் நடந்தது.
இந்த கண்காட்சியில் போலீஸ் துறையில் பழங்காலங்களில் பயன்படுத்தபட்ட, 'அம்பு, வால்கள், கண்ணீர் புகை குண்டு உள்ளிட்ட பிற குண்டுகள், 12 வகையான துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் பிஸ்டல் வகை துப்பாக்கிகள், ரைபில்கள், கியாஸ் துப்பாக்கி,' என, ஏராளமான ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கபட்டு இருந்தன. இதே போல், கருணை கொலை செய்ய பயன்படுத்தபட்ட பெல்ஜியம் நாட்டு துப்பாக்கி மற்றும் இரண்டு உலக போர் காலங்களில் பயன்படுத்தபட்ட, 200 ஆண்டு பழமையான துப்பாக்கி முதல் புதிதாக இந்தியாவில் தயாரிக்கபட்ட நவீன துப்பாக்கிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த கண்காட்சியை ஏராளமான பள்ளி மாணவர்கள் கண்டு வியந்தனர். இந்த ஆயுதங்கள் குறித்தும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் ஆயுதப்படை போலீசார் விளக்கமளித்தனர்.
குறிப்பாக, இந்த கண்காட்சியில் வடமாநில கூர்க்காகள் பயன்படுத்திய கத்திகள், ரைபிள் 450, 200 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கபட்ட லோடிங் துப்பாக்கி, ஏ.கே.47, இன்சாஸ் ரக துப்பாக்கிகள், 2008-ம் ஆண்டு தயாரிக்கபட்ட கார்பன் துப்பாக்கி, 303 துப்பாக்கிகள் மற்றும் இந்தியன் இலகு ரக துப்பாக்கிகள் மாணவர்களை வெகுவாக கவர்ந்தது.