மரம் விழுந்து வீடு சேதம் உயிர் தப்பிய ஐந்து பேர்
மரம் விழுந்து வீடு சேதம் உயிர் தப்பிய ஐந்து பேர்
ADDED : ஜூன் 05, 2026 02:55 AM

அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார் மரப்பாலம் அருகே உள்ள அட்டிகொல்லி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ்,54. நேற்று முன்தினம் இரவு இவரும், மகன் மணிகண்டனும் டி.வி., பார்த்து கொண்டிருந்தனர். மனைவி, மகள் மற்றும் பேரக்குழந்தை சமையல் அறையில் இருந்தனர். அப்போது வீட்டின் பின்புறம் இருந்த ஈட்டி மரம் வீட்டின் ஒரு அறையின் மீது விழுந்தது. அங்கு யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
செய்தமடைந்த வீட்டை கூடலுார் எம்.எல்.ஏ., திராவிடமணி, தி.மு.க., நிர்வாகி மகாகிருஷ்ணன், வனத்துறை, வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர். 'சேதமடைந்து வீட்டுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்,' என, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
