/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வேட்டைக்கு வந்த ஐந்து பேர் கைது கள்ளத் துப்பாக்கி; ஆயுதங்கள் பறிமுதல்

ADDED : அக் 10, 2024 06:29 AM

ஊட்டி : நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே பாலாடா பகுதியில் நேற்று முன்தினம் இரவு, ஊட்டி ரூரல் எஸ்.ஐ., பாபு மற்றும் போலீஸ்காரர்கள் சேதுலிங்கம், தினேஷ்குமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வழியாக வந்த காரை நிறுத்தி, காரில் இருந்த ஐவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசவே, ஐவரையும் காரில் இருந்து இறக்கி, காரை முழுமையாக சோதனை செய்தனர்.
காரில் ஒரு கள்ளத் துப்பாக்கி மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட கத்திகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவற்றை பறிமுதல் செய்தனர்.
ஐவரையும் ஊட்டி ரூரல் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கூடலுார் ஓவேலி பகுதியை சேர்ந்த சையத் முகமத், 37, கேரளா மாநிலம் வழிக்கடவு பகுதியை சேர்ந்த அலி, 56, ஹாரீஸ்மோன், 25, சாஹில்கான், 23, நவாஸ் செரீப், 33, ஆகியோர், நள்ளிரவில் வன விலங்குகளை வேட்டையாட வந்துள்ளது தெரிந்தது.
போலீசார் ஐவரையும் கைது செய்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை செய்கின்றனர்.