/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலை விபத்தில் தந்தையுடன் ஐந்து வயது குழந்தையும் பலி
/
சாலை விபத்தில் தந்தையுடன் ஐந்து வயது குழந்தையும் பலி
சாலை விபத்தில் தந்தையுடன் ஐந்து வயது குழந்தையும் பலி
சாலை விபத்தில் தந்தையுடன் ஐந்து வயது குழந்தையும் பலி
ADDED : ஜன 20, 2025 07:09 AM
கூடலுார், : கூடலுாரில் நடந்த சாலை விபத்தில் பைக்கில் பயணித்த ஐந்து வயது குழந்தையுடன் தந்தையும் பரிதாபமாக உயிரிழந்தார்.
கூடலுார் சுங்கம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல், 28. இவர் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, தனது மகன் விகுல்வர்சன், 5, உடன் டிபன் வாங்குவதற்காக பைக்கில், புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்றார். அவ்வழியாக சென்ற லாரி அருகே பைக் சென்றுள்ளது.
அப்போது, சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்த பைக் மற்றும் பழக்கடை இருப்பதை பார்த்து, அதில் மேல் மோதாமல் இருக்க, சாமுவேல் பிரேக் அடித்து பைக்கை நிறுத்த முயன்றார். எதிர்பாராமல் இருவரும் கீழே விழுந்து லாரியின் பின் டயரில் சிக்கி உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக கூடலுார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
--ஆட்டோ ஓட்டுனர் பலி
கூடலுார் நெலக்கோட்டையை சேர்ந்தவர் யாகூப் ஷெரிப்,65. ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம், நெலாகோட்டையில் இருந்து ஆட்டோவில், 4 பயணிகளுடன் கூடலுார் நோக்கி வந்துள்ளார்.
மதியம், 3:30 மணிக்கு பாடந்துறை, 3வது மைல் அருகே, காரும் ஆட்டோவும் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் படுகாயம் அடைந்த, ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார். விபத்து தொடர்பாக, தேவர்சோலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.