sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் கொடியேற்றம்

/

லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் கொடியேற்றம்

லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் கொடியேற்றம்

லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் கொடியேற்றம்


ADDED : ஜன 31, 2024 11:32 PM

Google News

ADDED : ஜன 31, 2024 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் ஆறாம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று காலை கொடியேற்றம் நடக்கிறது.

விழாவையொட்டி, நேற்று காலை,8:00 மணிக்கு திருமஞ்சனம், 11:00 மணிக்கு அன்னகூட்ட உற்சவம் நடந்தன.

இன்று காலை, 8:00 மணிக்கு கொடியேற்றம், சேஷ வாகன புறப்பாடு, திருமஞ்சனம், சிம்ம வாகன புறப்பாடு, ஹம்ச வாகன புறப்பாடு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 2ம் தேதி காலை, 8:00 மணிக்கு சூரிய பிரபை வாகனம் புறப்பாடு, தொடர்ந்து திருமஞ்சனம், மாலை கருட வாகன புறப்பாடு, அனுமந்த வாகன புறப்பாடு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

3ம் தேதி காலை, 8:00 மணிக்கு யாளி வாகனம் புறப்பாடு, திருமஞ்சனம், மாலை, 4:00 மணிக்கு நாச்சியார் திருக்கோலம், 6:00 மணிக்கு சந்திர பிரபை வாகனம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

4ம் தேதி காலை, 8:00 மணிக்கு கர்ப்ப விருட்ச வாகனம் புறப்பாடு, தொடர்ந்து, திருமஞ்சனம், யானை வாகனம் புறப்பாடு, மாலை, 6:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

5ம் தேதி காலை, 8:00 மணிக்கு குதிரை வாகனம் புறப்பாடு, காலை, 10:00 மணிக்கு தொட்டி திருமஞ்சனம், மாலை, 4:00 மணிக்கு கொடி இறக்கம், மாலை, 6:00 மணிக்கு மட்டை அடி உற்சவம் நடக்கிறது.

6ம் தேதி காலை, 8:00 மணிக்கு திருமஞ்சனம், 10:00 மணிக்கு தீர்த்தவாரி, மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில் கமிட்டியார் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us