/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு மலையில் மலரஞ்சலி
/
காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு மலையில் மலரஞ்சலி
ADDED : ஏப் 24, 2025 10:56 PM

குன்னுார்,; காஷ்மீர், பஹல்காமில், பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின், ஆத்மா சாந்தியடைய, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மோட்சதீபம் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
காஷ்மீர், பஹல்காமில், பயங்கரவாத தாக்குதலில், 28 பேர் உயிரிழந்தனர். இவர்களின் ஆத்மா சாந்தியடைய பல்வேறு இடங்களிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. குன்னுார் பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று இந்து முன்னணி சார்பில், மோட்ச தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் ஹரிஹரன் சீனிவாசன் உட்பட மக்களும் பங்கேற்று, அஞ்சலி செலுத்தினர்.
l கூடலுாரில் இந்து முன்னணி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சி, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், விளக்கு ஏற்றி, இறந்தவர்கள் படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
l ஊட்டியில் காபிஹவுஸ் சந்திப்பில் பா.ஜ., சார்பில் நடந்த அஞ்சலி கூட்டத்துக்கு நகர தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் பரமேஸ்வரன், செயலாளர்கள் அருண், வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். சம்பவத்தில் இறந்தவர்கள் படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
l கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை வகித்தார். பா.ஜ., மாவட்ட பொது செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். பா.ஜ., வர்த்தக நம்பிக்கை கணேசன், லலிதா உட்பட, கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இறந்தவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
l மஞ்சூர் பஜாரில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில், குந்தா மண்டல தலைவர் மீனாகுமாரி தலைமையில், இறந்தவர்களின் படத்துக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.