/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் மலர் கண்காட்சி நிறைவு; வெலிங்டன் ராணுவ கல்லுாரிக்கு முதலமைச்சர் சுழற்கோப்பை

ADDED : மே 26, 2025 04:38 AM

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்த மலர்கண்காட்சி நிறைவு விழாவில், சிறந்த மலர் அலங்காரங்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, 127வது மலர்கண்காட்சியை கடந்த, 15ம் தேதி மாநில முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
மலர் கண்காட்சியை, 11 நாட்களில், 1.77 லட்சம் சுற்றுலா பயணியர் கண்டு ரசித்துள்ளனர்.
இதன் நிறைவு விழா நேற்று மதியம் தாவரவியல் பூங்காவில் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று சிறந்த மலர் அலங்காரம், தனியார் பூங்கா, வீடு மற்றும் மாடி மலர் தோட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கினார்.
முக்கித்துவம் வாய்ந்த, சிறந்த பூங்காவுக்கான முதலமைச்சர் சுழற் கோப்பையை, குன்னுார் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு வழங்கினார்.
அருகில், அரசு கொறடா ராமச்சந்திரன் உட்பட பலர் உள்ளனர்.
தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி, உதவி இயக்குனர் பீபிதா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.