/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலம்புழாவில் 16ல் மலர் கண்காட்சி: ஏற்பாடுகள் தீவிரம்
/
மலம்புழாவில் 16ல் மலர் கண்காட்சி: ஏற்பாடுகள் தீவிரம்
மலம்புழாவில் 16ல் மலர் கண்காட்சி: ஏற்பாடுகள் தீவிரம்
மலம்புழாவில் 16ல் மலர் கண்காட்சி: ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : ஜன 09, 2025 10:46 PM

பாலக்காடு,; பாலக்காடு, மலம்புழா பூங்காவில் வரும், 16ம் தேதி முதல் நடக்கும் மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கேரள மாநில நீர்ப்பாசனத் துறையும், மாவட்ட சுற்றுலா துறையும் இணைந்து, பாலக்காடு அருகேயுள்ள, மலம்புழா பூங்காவில் மலர் கண்காட்சி நடத்துகிறது. இக்கண்காட்சி வரும், 16ம் தேதி துவங்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன.
மலம்புழா பூங்கா நுழைவுக்கட்டணமாக, பெரியவர்களுக்கு 30 ரூபாய், குழந்தைகளுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வரும், 16ம் தேதி துவங்கும் மலர் கண்காட்சி, 22ம் தேதி வரை ஏழு நாட்கள் நடக்கிறது.
நீர்ப்பாசன துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு நடத்திய மலர் கண்காட்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அதனால், இந்த ஆண்டும் மலர் கண்காட்சி நடத்த தீர்மானித்தோம்.
சுமார் ஒரு லட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மலர்கள் இதற்காக தயார் செய்யப்பட்டு உள்ளன.
கண்காட்சிக்காக, பெங்களூருவில் இருந்து உயர்தர விதைகளை வாங்கி பூங்காவிலும் வேளாண் துறையின் பண்ணைகளிலும் நாற்று உற்பத்தி செய்து உள்ளோம். இவை பூங்காவில் நடும் பணிகள் நடந்து வருகின்றன.
ஆர்க்கிட், செண்டு மல்லி, சூரியகாந்தி, டெலிசியா, காஸ்மோஸ், டேலியா, பூகேன்வில்லியா, சால்வியா, பிரெஞ்ச் மேரிகோல்டு, பெட்டூனியா, வின்கா, ஜின்னியா, கிரிஸான்தமம், கோப்ரினா, மேரி கோல்ட், ஆஸ்டர் உள்ளிட்ட 30 வகையான மலர்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.
பல்வேறு வண்ணத்தில் உள்ள ரோஜா பூக்களும் பூங்காவை அழக்கூடும். இதற்குத் தேவையான பூச்செடிகளை கடந்த மூன்று மாதங்களாக பராமரித்து வருகிறோம்.
கண்காட்சியை முன்னிட்டு, பூங்காவில் சீரமைப்பு பணிகளும் நடக்கின்றன.சுற்றுலா பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. போட்டோ பாயின்ட், செல்பி கார்னர், வாட்டர் பவுண்டன், மியூசிக் பவுண்டன் ஆகியவையும் கண்காட்சியின் ஒரு பகுதியாக அமைக்கப்படுகிறது. உணவு கண்காட்சி, ஸ்டால்கள் மற்றும் செடி விற்பனை மையம் ஆகியவையும் கண்காட்சியின் ஒரு பகுதியாக இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

