காட்டேரி பூங்காவில் மலர் நாற்று நடவு பணி துவக்கம்
காட்டேரி பூங்காவில் மலர் நாற்று நடவு பணி துவக்கம்
ADDED : மார் 19, 2026 05:13 AM

குன்னுார்: குன்னுார் காட்டேரி பூங்காவில், 3 லட்சம் நாற்றுக்கள் நடவு பணி துவங்கியது.
குன்னுார் காட்டேரி பூங்காவில் கோடை சீசனுக்கான மலர் நாற்றுக்கள் நடவும் பணி நேற்று துவங்கியது.
சிறப்பு பூஜையுடன், தோட்டக்கலை இணை இயக்குனர் நவநீதா துவக்கி வைத்து கூறுகையில், ''கடந்த ஆண்டு இங்கு மலை பயிர்கள் கண்காட்சி நடந்தது. இந்த ஆண்டு கோடை சீசனுக்கான, 30 வகையான மலர் விதைகள் பெறப்பட்டுள்ளன. 'வெர்பினா, மேரி கோல்டு, பால்சம், ஆன்டிரினம், பெகோனியா, சால்வியா,' உள்ளிட்ட ரகங்களில் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, தற்போது நடவு செய்யப்படுகிறது.
''3 லட்சம் நாற்றுக்கள் நடவு செய்யப்படும் நிலையில், ஏப்., 3வது வாரத்தில் பூக்கள் மலரும். தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு, மே மாதம் கோடை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்படும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயலட்சுமி, சிம்ஸ் பூங்கா உதவி இயக்குனர் விஜயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
