/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரண்டாவது சீசனுக்கு பூத்து குலுங்கும் மலர்கள்; பூங்காவில் சிறப்பு ஏற்பாடு பணிகள் தீவிரம்

ADDED : ஆக 26, 2025 09:33 PM

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்கு பூந்தொட்டிகளை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசன் செப்., அக் ., மாதங்களில் நடக்கிறது. கடந்த சில மாதங்களாக பூங்காவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெளிநாட்டு சுற்றுலா பயணியர் இரண்டாவது சீசனுக்கு அதிக அளவில் வருகை தருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணியரை மகிழ்விக்க, 5 லட்சம் மலர் நாற்றுக்கள் தயார் செய்ய பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக மலர் செடிகள் கொல்கத்தா , காஷ்மீர், பஞ்சாப், புனே, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அதில், 'இன்கா மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரி கோல்டு, ஆஸ்டர், வெர்பினா, லுாபின்,கேன்டிடப்ட், பெட்டூனியா,' உள்ளிட்ட, 60 வகைகளில் பல்வேறு வகையான விதைகள் பெறப்பட்டது. தவிர, பூங்காவிலேயே விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, 4 லட்சம் வண்ண மலர் செடிகள் இரண்டாவது சீசனுக்கு பாத்திகளில் நடவு செய்யப்பட்டது. 15 ஆயிரம் மலர் தொட்டிகளில், 'சால்வியா, டெய்சி, அந்தோரி, டெல் பீனியம், டேலியா, லில்லி,' உள்ளிட்ட, 30 வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. சீசன் துவங்க இரு வாரம் உள்ள நிலையில் பராமரிக்கப்பட்டு வந்த மலர்கள் ஆங்காங்கே பூத்து குலுங்குகிறது.