/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மரத்தில் இலைகள் உதிர்ந்த நிலையில் பூத்துள்ள மலர்கள்; பயணிகள் வியப்பு

ADDED : ஏப் 11, 2025 10:01 PM

கூடலுார்; கூடலுாரில், 'ட்ரம்பெட்' மரங்களில் பூத்து குலுங்கும் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளன.
கூடலுார் பகுதி மண்வளம், மிதமான காலநிலை அனைத்து வகையான தாவரங்கள், பூக்கள் வளர்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது.
தற்போது, கூலுார் சாலை ஓரங்களில், கேரளா அரசின் மாநில மலரும், கேரளா விஷூ பண்டிகையில், பூஜையில் இடம்பெறும் முக்கிய மலரான சரக்கொண்டை மலர்கள் அதிக அளவில் பூத்துள்ளது. இதே போன்று, கோழிக்கோடு சாலை நாடுகாணி பகுதியில் சாலையோரம் அலங்கார மரங்களாக நடவு செய்து பராமரித்து வரும், ட்ரம்பெட் மரத்தில் இலைகள் உதிர்ந்து பூக்கள் மலர்ந்துள்ளன. இவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
தாவர ஆய்வாளர்கள் கூறுகையில், 'கூடலுார் பகுதியில் தாவரங்கள், பூக்கள் வளர்வதற்கு ஏற்ற சூழல் உள்ளது. எனவே, கோடை சீசன் காலங்களில் பூத்து குலுங்கும், அலங்கார பூ மரங்களை சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி நடவு செய்து வளர்த்தால், அதில், கோடையில் பூக்கும் பூக்கள் அழகாக காட்சி தரும். சுற்றுலா பயணிகளின் மனதுக்கும் இதமாக இருக்கும்,' என்றனர்.