/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உணவு கலாசார மாற்றம்; நோயின் பிடியில் இளையோர்
/
உணவு கலாசார மாற்றம்; நோயின் பிடியில் இளையோர்
ADDED : நவ 17, 2024 10:14 PM
குன்னுார் ; குன்னுார் கேத்தி சி.எஸ்.ஐ., மேல்நிலை பள்ளியில், மாணவ, மாணவியர் அடங்கிய குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் சார்லஸ் சில்வர்ஸ்டார் தலைமை வகித்தார். கருத்தாளராக கலந்து கொண்ட, குன்னுார் லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் பேசுகையில், ''உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கையால் பொருட்களை வாங்கி குவிக்கும் கலாசாரம் அதிகரித்துள்ளது.
கடன், வரதட்சணை, லஞ்சம் ஆகிய சமூக தீமைகள் அதிகரித்து வருகின்றன. சிகப்பாக இருப்பது அழகு; ஆங்கிலம் தான் அறிவு; பணம்தான் மகிழ்ச்சி என்ற புதிய மூடநம்பிக்கைகள் முளைத்துள்ளன. உணவு கலாசாரம் முற்றிலும் மாறிவிட்டதால் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் உடல் மற்றும் மன நோய்களுக்கு ஆளாகின்றனர். 'பரோட்டா, நுாடுல்ஸ், சாக்லேட், சிப்ஸ்' போன்றவற்றிற்கு குழந்தைகள் அடிமையாகின்றனர்.
இளம் வயதில் மாணவர்கள் தேவைகளை குறைத்து கொள்ளவும், தேவையற்ற பொருள்களை மறுக்கவும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய மறுசுழற்சி பொருட்களை பயன்படுத்தவும் பழகி கொள்வது அவசியம்,'' என்றார்.