/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கால்பந்து போட்டி; கெந்தொரை அணி வெற்றி
/
கால்பந்து போட்டி; கெந்தொரை அணி வெற்றி
ADDED : நவ 26, 2024 10:09 PM
கோத்தகிரி; கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான, 'சி'டிவிஷன் கால்பந்து போட்டி நடந்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 20க்கும் மேற்பட்ட தலைசிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இப்போட்டி தொடரில், 'சி' டிவிஷன் பிரிவு முதல் போட்டி, 'விங்ஸ்' கெந்தொரை அணி மற்றும் அணிக்கொரை அணிகளுக்கு இடையே நடந்தது. மிகவும் பரபரப்பாக நடந்த இப்போட்டியில், 2:0 என்ற கோல் கணக்கில் கிங்ஸ் கெந்தொரை அணி வெற்றி பெற்றது. அடுத்து நடந்த போட்டியில் கோத்தகிரி 'புல்சன்' அணி மற்றும் எப்.சி., பேந்தர் அணிகளுக்கு இடையே நடந்தது. அதில்,1:0 என்ற கோல் கணக்கில், புல்சன் அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து, நடந்த போட்டியில், ரிவர்சைடு அணி மற்றும் அலென் மார்க்ஸ் அதிகம் விளையாடின. இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடிய நிலையில், போட்டி டிராவில் முடிந்தது.
போட்டி ஏற்பாடுகளை, மாவட்ட கால்பந்து கழகம் செய்து வருகிறது.