/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் அருகே பழங்குடியின இளைஞர்களுக்கான கால்பந்து போட்டி
/
பந்தலுார் அருகே பழங்குடியின இளைஞர்களுக்கான கால்பந்து போட்டி
பந்தலுார் அருகே பழங்குடியின இளைஞர்களுக்கான கால்பந்து போட்டி
பந்தலுார் அருகே பழங்குடியின இளைஞர்களுக்கான கால்பந்து போட்டி
ADDED : பிப் 13, 2025 09:18 PM

பந்தலுார்,; பந்தலுார் அருகே அம்பலமூலா பகுதியில் செயல்பட்டு வரும், நீலகிரி- வயநாடு பழங்குடியினர் நல சங்கம் சார்பில், ஆண்டுதோறும் பழங்குடியின இளைஞர்களுக்கான கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இரவு நேர விளக்கொளியில் மைதானத்தில் நடந்த போட்டிகளை, சங்க செயலாளர் ஜான் துவக்கி வைத்து பேசினார். போட்டியில் பந்தலுார் தாலுகாவை சேர்ந்த, 10 அணிகள் பங்கேற்று விளையாடின.
இறுதி போட்டியில் எருமாடு கூட்டாடு அணி முதல் இடத்தையும், செருகுன்னு அணி, 2-ம் இடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகள் மற்றும் சிறந்த கோல் கீப்பர் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும், பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் சந்திரன் நன்றி கூறினார்.