sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 நடைபாதை ஆக்கிரமிப்பு; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

/

 நடைபாதை ஆக்கிரமிப்பு; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

 நடைபாதை ஆக்கிரமிப்பு; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

 நடைபாதை ஆக்கிரமிப்பு; கண்டுகொள்ளாத அதிகாரிகள்


ADDED : பிப் 18, 2026 06:04 AM

Google News

ADDED : பிப் 18, 2026 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: ஜெகதளா நடை பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றவும், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குன்னுார் அருகே அருவங்காடு ஜெகதளா கிராமத்தில், சிவன் கோவில் முதல், அணை வரை உள்ள நடைபாதையை நுாற்றாண்டு காலமாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நடைபாதை பகுதியில் சமீபத்தில் தனியாரால் மதில்சுவர் கட்டப்பட்டுள்ளது. பொது குடிநீர் குழாய்கள் மற்றும் 15 வீடுகளின் மழை நீர் கால்வாய் செல்லும் கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து மக்கள் கலெக்டருக்கு புகார் மனு கொடுத்துள்ளனர். இப்பகு தியை சேர்ந்த முரளி கூறுகையில்,''பொது பாதையை தடுத்து, ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதை ஆய்வு செய்து தீர்வு காண பல அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் வரை ஏற்கனவே மனுக்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. கழிவுநீர் வீடுகளில் அஸ்திவார பகுதிகளுக்குள் செல்வதால், பெரிய பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இங்கு நோயாளிகளை சுமந்து செல்லவும், இறப்பு ஏற்பட்டாலும், எடுத்து செல்வதிலும் சிரமம் உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் படி, பொது பாதையை தடுக்காமல், மக்களின் நலன் காக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என் றார்.






      Dinamalar
      Follow us