/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியிருப்புக்கு வரும் குரங்குகள் வனத்துறை நடவடிக்கை அவசியம்
/
குடியிருப்புக்கு வரும் குரங்குகள் வனத்துறை நடவடிக்கை அவசியம்
குடியிருப்புக்கு வரும் குரங்குகள் வனத்துறை நடவடிக்கை அவசியம்
குடியிருப்புக்கு வரும் குரங்குகள் வனத்துறை நடவடிக்கை அவசியம்
ADDED : மார் 11, 2024 01:17 AM

மஞ்சூர்:'குரங்கு தொல்லையை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குரங்குகள் கிராமங்கள் தோறும் சுற்றி திரிவது அதிகரித்துள்ளது.
விளை நிலங்களை சேதப்படுத்துவதால், விவசாயிகள் மலை காய்கறிகளை பயிரிடுவதை நிறுத்தியுள்ளனர். காய்கறிகளை கடைகளில் வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வெளியிடங்களில் காய வைக்கும் விளை பொருட்களை துாக்கி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. மேலும், வீடுகளில் புகுந்து பொருட்களை துாக்கி செல்கிறது. எனவே, குரங்குளை பிடித்து அடர்ந்து வனப்பகுதியில் விட வேண்டும்.