/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையை கடக்கும் விலங்குகளுக்கு இடையூறு செய்யாதீர் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை 'அட்வைஸ்'

ADDED : நவ 20, 2024 10:05 PM

கூடலுார் ; 'முதுமலையில், சாலையை கடக்கும், வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது,' என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் பெய்த பருவமழையை தொடர்ந்து வனப்பகுதி பசுமைக்கு மாறியதால், சாலையோரங்களில் யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன.
'இவ்வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள், வனவிலங்குகள் அருகே வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்த கூடாது,' என, வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
எனினும், சிலர் வாகனங்களை நிறுத்தி விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், சாலையோரங்களில் மேய்ச்சலில் ஈடுபடும் யானை போன்ற வனவிலங்குகள், உணவு குடிநீருக்காக அடிக்கடி சாலை கடந்து செல்கின்றன. இவைகள் சாலை கடக்கும் போது, சிலர் அதன் அருகே வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
இதனால், குறிப்பாக யானைகள் சாலையை கடந்து சிரமப்படுகின்றன. சில நேரங்களில் சுற்றுலா பயணிகளை தாக்கும் அபாயம் உள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'யானை, காடெருமை போன்ற வனவிலங்குகள் சாலையை கடக்கும் போது அவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் தாக்கும் ஆபத்து உள்ளது. மான் போன்ற விலங்குகள் வாகனங்களில் அடிப்படும் சூழல் உள்ளது. வனவிலங்குகள், சாலையை கடக்கும் போது வாகனங்களை நிறுத்தி செல்ல வேண்டும். இதன் மூலம், ஆபத்து மற்றும் பாதிப்பை தடுக்க முடியும்,' என்றனர்.