/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானையால் குடியிருப்பு சேதம் வனத்துறையினர் ஆய்வு
/
யானையால் குடியிருப்பு சேதம் வனத்துறையினர் ஆய்வு
ADDED : மே 29, 2025 11:01 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே பெருங்கரை கிராமத்தை ஒட்டிய, வனப்பகுதியில் இரண்டு யானைகள் முகாமிட்டு உள்ளன.
நேற்று முன்தினம் இரவு கிராமத்திற்கு சென்ற யானைகள், சோமசுந்தரம் என்பவரின் வீட்டு சுவரை இடித்து சேதப்படுத்தியது. கடந்த ஆண்டும் இவரின் வீட்டு சுவரை யானை சேதப்படுத்திய நிலையில், வீட்டிற்குள் தனியாக இருந்த சோமசுந்தரம் யானையிடமிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரகர் ரவி தலைமையிலான வனக்குழுவினர், பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு செய்ததுடன், கிராமத்தை ஒட்டி முகாமிட்டிருந்த யானைகளை வனப்பகுதிக்குள் துரத்தினர். பாதிக்கப்பட்ட நபருக்கு வனத்துறை மூலம் உரிய இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.