/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆற்றை நோக்கி வரும் காட்டு யானைகள் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை 'அட்வைஸ்'

ADDED : ஜன 16, 2025 11:13 PM

கூடலுார்,; 'முதுமலையில், குடிநீருக்காக ஆற்றை நோக்கி வரும் காட்டு யானைகள், மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபடுவதுடன், அடிக்கடி சாலையை கடந்து செல்வதால் அவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது,' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், பருவமழை நிறைவு பெற்ற நிலையில், தற்போது பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், வனப்பகுதியில் தாவரங்கள், புற்கள் பசுமை இழந்து கருக துவங்கி உள்ளன.
அப்பகுதியில் உள்ள யானைகள் குடிநீர், உணவு தேடி மைசூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய மாயாறு ஆற்றை நோக்கி வர துவங்கியுள்ளன. இவைகள் சாலை ஓரங்களில் மேச்சலில் ஈடுபடுவதுடன், அடிக்கடி சாலையைக் கடந்து செல்கின்றன. இவைகள் அருகே, வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தினால் தாக்கும் ஆபத்து உள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபடும் யானை போன்ற வனவிலங்குகளின் அருகே சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்தி இடையூறு ஏற்படுத்தினால் தாக்கும் ஆபத்துள்ளது.
இதுகுறித்து, சோதனை சாவடியில் பணியில் உள்ள வன ஊழியர்கள், சுற்றுலா பயணிகளிடம் அறிவுறுத்தி வருகின்றனர். இதனை மீறுபவர்கள் மீது வன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.