sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கிராம மக்களை வெளியேற்ற வனத்துறை நடவடிக்கை: ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

/

கிராம மக்களை வெளியேற்ற வனத்துறை நடவடிக்கை: ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கிராம மக்களை வெளியேற்ற வனத்துறை நடவடிக்கை: ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கிராம மக்களை வெளியேற்ற வனத்துறை நடவடிக்கை: ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை


ADDED : ஜூலை 07, 2025 08:13 PM

Google News

ADDED : ஜூலை 07, 2025 08:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டி அருகே அஜ்ஜூர் கிராம மக்களை வெளியேற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.

ஊட்டி அடுத்த கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அஜ்ஜூர் கிராமத்தில், 350 படுகர் இன குடும்பங்கள், 200 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றன. இவர்களுக்கு அரசு சார்பில், பள்ளி, சமுதாய கூடம் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. மின் இணைப்பு பெற்றுள்ளனர்.

தவிர, கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய நிலத்திற்கான வரி கட்டி, அனுபவித்து வருகின்றனர். இங்குள்ள, 180 வீடுகளுக்கு, 2008ம் ஆண்டு வருவாய் துறை வாயிலாக, இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், 105 வீடுகளுக்கான இலவச பட்டா, முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அஜ்ஜூர் கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள், நீலகிரி வடக்கு வனக்கோட்டம், கட்டபெட்டு வனச்சரகத்திற்கு சேருவதாக, சென்னை ஐகோர்ட், 2017, பிப்., மாதம் ஆணை பிறப்பித்துள்ளதாக கூறி, 140 வீடுகளை காலி செய்ய வனத்துறை 'நோட்டீஸ்' வினியோகித்தது. வனத்துறையின் இந்த நடவடிக்கையால் அஜ்ஜூர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இவர்கள் அப்போதைய மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். அவர், 'அப்பகுதியிலிருந்து யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள். அப்பகுதி நில அளவை செய்ய வனத்துறையினர் அடங்கிய குழு அமைக்கப்படும். வன உரிமை சட்டத்தின் கீழ் அப்பகுதியில் விவசாயம் மற்றும் குடியிருப்பதற்கான சான்று வழங்குபவர்களுக்கு அனுபோகம் வழங்கப்படும்,' என,தெரிவித்தார்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை


தற்போது, மீண்டும் அஜ்ஜூர் பகுதியில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறை இறங்கியுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து, அஜ்ஜூர் கிராம நலச்சங்க தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை, மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். 'இந்த பிரச்னைக்கு தீர்வு காண வனத்துறையிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என, கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us