/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில் புலிகள் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை திட்டம்

ADDED : அக் 25, 2024 09:41 PM

பந்தலுார்: பந்தலுார் எல்லையில் உள்ள, கேரளா வயநாடு பகுதியில் குடியிருப்புகளை ஒட்டி முகாமிட்டுள்ள புலிகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பந்தலுார் அருகே சோலாடி சோதனை சாவடியை ஒட்டி, கேரளா மாநிலம் வயநாடு சுண்டா பகுதி அமைந்துள்ளது. இதனை ஒட்டிய ஆணைப்பாறை என்ற பகுதியில் கடந்த சில வாரங்களாக வளர்ப்பு கால்நடைகளை, புலிகள் வேட்டையாடி வந்தது.
தொடர்ந்து புலிகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில், வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு கேமராவில் இரண்டு புலிகள் அந்த பகுதியில் நடமாடி வந்தது பதிவானது. அதனை தொடர்ந்து, கேரளா வனத்துறை அமைச்சர் சசீதரன், 'இந்த புலிகளை, மயக்க ஊசி செலுத்தி பிடித்து சென்று அடந்த வனத்தில்விட வேண்டும்,' என வலியுறுத்தி உள்ளார்.
புலிகள் நடமாட்டத்தால் இந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து, வனத்துறையினர் இதன் சுற்றுவட்டார பகுதிகளில், முகாமிட்டு இங்கு உலா வரும் புலிகளை கண்காணித்து வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'அரசு உத்தரவு கிடைத்தவுடன் இந்த இரண்டு புலிகளை மயக்க ஊசி செலுத்தி அல்லது கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும்,' என்றனர்.