/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் சாய்ந்த மூங்கில்; அகற்றிய வனத்துறையினர்
/
சாலையில் சாய்ந்த மூங்கில்; அகற்றிய வனத்துறையினர்
ADDED : டிச 04, 2024 09:48 PM
கூடலுார் ; கூடலுார் ஓவேலி சாலையில் சாய்ந்த மூங்கிலை வன ஊழியர்கள் அகற்றினர்.
கூடலுார் ஓவேலி பெரிய சூண்டி மரப்பாலம் அருகே காய்ந்த மூங்கில் சாலையில் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓவேலி வனச்சரகர் சுரேஷ் உத்தரவுப்படி, யானை விரட்டும் வன குழுவினர் அப்பகுதிக்கு சென்று, பொக்லைன் உதவியுடன், மூங்கிலை அகற்றி போக்குவரத்து சீரமைத்தனர்.
இதனிடையே, 'மூங்கிலை அகற்றுவதற்காக வந்த பொக்லைனை ஓவேலி சோதனை சாவடியில், வனத்துறையினர் நிறுத்தியதாகவும், வருவாய் துறை அதிகாரிகள், தலையிட்ட பின், அனுமதித்தனர்,' என்ற புகார் எழுந்து.
இந்நிலையில், ஓவேலி வனச்சரகர் சுரேஷ்குமார் வெளியிட்ட அறிக்கையில், 'ஓவேலி சாலையில், விழுந்த மூங்கில் மரத்தை, அகற்றுவதற்காக ஓவேலி வன சோதனை சாவடி வழியாக பொக்லைன் வந்துள்ளது.
இதுகுறித்து, வன ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, பொக்லைன் அனுமதிக்கபட்டது. இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டோம்.
இந்நிலையில், சிலர் வனத்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்,' என, கூறியுள்ளார்.