/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊருக்குள் புகுந்த கரடி குட்டி மீட்ட வனத்துறையினர்
/
ஊருக்குள் புகுந்த கரடி குட்டி மீட்ட வனத்துறையினர்
ADDED : பிப் 06, 2025 12:20 AM

பந்தலுார்: நீலகிரி மாவட்ட எல்லையான பாட்டவயல், சோதனை சாவடி அருகே கேரள மாநிலம் முத்தங்கா வனப்பகுதியை ஒட்டி பொன்குழி கிராமம் அமைந்துள்ளது.
இங்குள்ள மன்மதமூலா என்ற பகுதியில் நேற்று மதியம் கரடி குட்டி ஒன்று ஊருக்குள் வந்துள்ளது. அங்கிருந்தவர்கள் பிடித்து, வீட்டிற்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர், அது கரடி குட்டி என தெரிய வந்தது.
தொடர்ந்து, மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, கரடி குட்டியை மீட்டு சுல்தான் பத்தேரி வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வனத்துறையினர் கூறுகையில், 'கால்நடை டாக்டர் ஆய்விற்கு பின்னர் கரடி குட்டியை, தொடர்ந்து பராமரிப்பது குறித்து முடிவு செய்யப்படும்,' என்றனர்.