/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'டிரோன்' கேமராவில் ஒலி எழுப்பி காட்டு யானையை விரட்டும் வனத்துறை
/
'டிரோன்' கேமராவில் ஒலி எழுப்பி காட்டு யானையை விரட்டும் வனத்துறை
'டிரோன்' கேமராவில் ஒலி எழுப்பி காட்டு யானையை விரட்டும் வனத்துறை
'டிரோன்' கேமராவில் ஒலி எழுப்பி காட்டு யானையை விரட்டும் வனத்துறை
ADDED : ஏப் 06, 2025 09:35 PM

கூடலுார்; கூடலுார் பாடந்துறை பகுதியில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும், காட்டு யானையை 'டிரோன்' கேமரா உதவியுடன் கண்காணித்து, ஒலி எழுப்பி விரட்டும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கூடலுார் பாடந் துறையை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக, முகாமிட்டுள்ள காட்டு யானை, இரவில் குடியிருப்புக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
வன ஊழியர்கள் கண்காணித்து விரட்டினாலும், குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், வனத்துறை சார்பில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில், 'பாடந்துறை பகுதியில் காட்டு யானைகள் நுழைவது நிரந்தரமாக தடுக்க வேண்டும்' என, மக்கள் வலியுறுத்தினர். இதற்கான நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதியளித்தனர்.
அதன்படி, வனவர் குமரன் மற்றும் வன ஊழியர்கள் பாடந்துறை பகுதிக்கு சென்று, 'டிரோன்' கேமரா உதவியுடன் யானையை கண்காணித்து, அதன் மூலம் ஒலி எழுப்பி யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினர் கூறுகையில், 'காட்டு யானை தொடர்ந்து கண்காணித்து, குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில், நைட் விஷன்' (தெர்மல்) டிரோன் கேமரா மூலம் யானைகளை கண்காணித்து விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

