தேசிய நெடுஞ்சாலையோரம் வனத்தீ :கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்
தேசிய நெடுஞ்சாலையோரம் வனத்தீ :கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்
ADDED : ஏப் 09, 2026 07:47 PM

கூடலுார்: கூடலுார் மாக்கமூலா அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம் ஏற்பட்ட வனத்தீயை தீயணைப்பு துறையினர் கட்டுப்படுத்தினர்.
கூடலுாரில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆங்காங்கே ஏற்படும் வனத்தீயை கட்டுப்படுத்த ஜெனரேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய தீயணைப்பு வாகனம் க வனத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மார்க்கமூலா பகுதியில் மைசூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று மதியம், 12:00 மணிக்கு வனத்தீ ஏற்பட்டது, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் தண்ணீர் பாய்ச்சு, வனத்தீயை கட்டுப்படுத்தினர். இதனால், பெரும் வனத்தீ தடுக்கப்பட்டது.
வனத்துறையினர் கூறுகையில்,' வனத்தீ தானாக ஏற்படாது. சமூக விரோதிகள் இந்த செயலில் ஈடுபடுகின்றனர். அத்தகைய நபர்கள் குறித்து மக்கள் தகவல் தர முன் வர வேண்டும்,' என்றனர்.
