ADDED : நவ 15, 2026 06:26 PM
அ நிறம் | அளவு
கூடலூர்: முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில் வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு வருகை தந்த வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், முதுமலை புலிகள் காப்பகத்தில் நேற்று (நவ.,14), ஆய்வு செய்தார். அன்னிய களைச்செடிகள் அகற்றப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள கால்நடை மருத்துவமனை, முகாமில் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு மற்றும் உணவு வழங்கும் முறைகள் குறித்து ஆய்வு செய்தார்.
முதுமலை துணை இயக்குனர் கணேசன், வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் மற்றும் வன ஊழியர்கள் யானைகள் பராமரிப்பு குறித்து அமைச்சருக்கு விளக்கம் அளித்தனர். முகாமுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளிடம் கலந்துரையாடினார்.
