/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலை கணேசனுடன் காட்டு யானை 'பாசவலை': வனத்துறையினர் விரட்டினாலும் 'நோயூஸ்'
/
முதுமலை கணேசனுடன் காட்டு யானை 'பாசவலை': வனத்துறையினர் விரட்டினாலும் 'நோயூஸ்'
முதுமலை கணேசனுடன் காட்டு யானை 'பாசவலை': வனத்துறையினர் விரட்டினாலும் 'நோயூஸ்'
முதுமலை கணேசனுடன் காட்டு யானை 'பாசவலை': வனத்துறையினர் விரட்டினாலும் 'நோயூஸ்'
ADDED : நவ 27, 2025 04:37 AM

கூடலுார்: முதுமலை அபயாரணயம் யானை முகாமுக்கு வந்து, 50 வயதான வளர்ப்பு யானையுடன் நண்பனாக பழகும், 10 வயது காட்டு யானையை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு, அபயாரண்யம் யானைகள் முகாமில், 3 குட்டி யானைகள் உட்பட, 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவைகளுக்கு வனத்துறை சார்பில் காலை, மாலை நேரங்களில் அரிசி, ராகி, கொள்ளு உள்ளிட்ட சமைத்த உணவுகள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், அபயாரண்யம் யானைகள் முகாமுக்கு வர துவங்கியுள்ள, 10 வயது மதிக்க தாக்க இளம் ஆண் காட்டு யானை, தற்போது 'மஸ்து' காரணமாக தனியாக பராமரித்து வரும் வளர்ப்பு யானை கணேசன் உடன் தோழமையாக பழகி வருகிறது. மேலும், அதற்கு வைக்கப்படும் சமைத்த உணவு மற்றும் தழைகளை காட்டு யானையுடன் பங்கு போட்டு உண்டு வருகிறது. இதனை கணேசன் தடுக்காமல் இருப்பது வனத்துறை மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குட்டியானையை வனத்துறையினர் விரட்டினாலும் காட்டு யானை, முகாமை ஒட்டிய வனப்பகுதிக்கு சென்று மீண்டும், கணேசனை பார்க்க வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. வனத்துறையினர் கூறுகையில்,'மஸ்து காலங்களில், வளர்ப்பு யானை கணேசன் அருகே காட்டு யானைகள் கூட நெருங்க விடாது. அதற்கு கோபம் வரும்.
ஆனால், தற்போது, இளம் காட்டு யானையுடன் தோழமையாக பழகி வருவது ஆச்சரியமாக உள்ளது. இதனால், காட்டு யானையை வேறு பகுதிக்கு விரட்டும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது,' என்றனர்.

