ADDED : ஜன 03, 2026 06:04 AM

அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக அலுவலகத்தில், வனச்சரகர் ரவி தலைமையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதில், கேக் வெட்டி, வனத்துறை ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
அதில், வன குற்றங்கள் ஏதும் நடக்காமலும், யானை-மனித மோதல் ஏற்படாமலும் இருக்க சிறப்பு பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சியில் வனவர்கள் சுதீர்குமார், ஆனந்த் மற்றும் வனத்துறை ஊழியர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
